ஞாயிறு, 24 ஜனவரி, 2010
கோணேசர் ஆலய நுழைவாயிலில் பெரும்பான்மையின வியாபாரிகளின் தட்டிக்கடைகள் அதிகரிப்பு..!
திருமலை திருக்கோணேசர் ஆலயத்தை நோக்கி பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளின் வரவு அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து கோணேசர் ஆலய நுழைவாயிலில் சிங்கள வியாபாரிகளின் தட்டிக்கடைகள் முளைத்துள்ளதுடன் அவை அதிகரித்தும் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆலயத்தின் அன்னதான மண்டபத்திற்கும் ஆலய நுழைவாயிலிற்குமிடையில் இக்கடைகள் இருமருங்கிலும் இவர்களால் அதிகளவில் போடப்பட்டுள்ளன. இது ஒருசில மாதங்களுக்குள்ளேயே உருவாகியுள்ளன என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இதற்காக ஆலய நிருவாகத்திடம் எவ்வித அனுமதிகளும் பெறப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அதிகளவில் வரும் சுற்றுலாப்பயணிகள் சங்கமித்தவுக்கு முன்னுள்ள முத்தவெளிமைதானத்தில் தமது பஸ் மற்றும் வாகனங்களை நிறுத்துவதற்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. நாளாந்தம் மற்றும் சனி, ஞயிறு தினங்களில் அதிகளவு பஸ்கள் இங்கு நிறுத்தப்படடிருப்பதனையும் காணமுடியும். இந்த நிலமைகளால் இந்துக்கள் மத்தியில் அச்சமான சூழல் காணப்படுவதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக