நாட்டில் அமைதியையும் ஜனநாயகத்தையும் சீர்குலைக்கும் வகையில் வன்முறையில் ஈடுபடும் எவராயினும் அவர்களை எவ்வித தராதரம் பாரபட்சமுமின்றி கைது செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
பொலிஸாரினால் இதனைத் தனித்து நிறைவேற்ற முடியாத பட்சத்தில் பொலிஸ் விசேட செயலணி மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் அவர்கள் இதனை மேற்கொள்ள முடியுமெனவும் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பாதுகாப்பையும் அமைதியையும் உறுதிப்படுத்துமாறு அவர்களுக்குப் பணிப்புரை விடுத்தார்.
ஐக்கிய மக்கள் சதந்திர முன்னணியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் பண்டாரவளை நகரில் நடைபெற்றது.
இப்பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,
இந்த நாட்டில் வன்முறைக்கு இனி இடமில்லை. ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாகச் செயற்படுகின்றோம். எனினும் ஜே.வி.பி.யினர் கடந்த காலங்களைப் போன்று வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் திராணி ஜே.வி.பி. தலைவர்களுக்கோ ஐ.தே.க. தலைவர்களுக்கோ கிடையாது. ஜே.வி.பி.யே இன்று ஐக்கிய தேசியக் கட்சியையும் வழி நடத்துகிறது.
எம்மைப் பொறுத்தவரை நாட்டின் அமைதி நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பே முக்கியம் எவ்வித குழப்பங்களுக்கும் இனி இந்த நாட்டில் இடமில்லை என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக