வெள்ளி, 15 ஜனவரி, 2010

தபால்மூல வாக்கெடுப்பில் 401118 வாக்குகள் பதிவாகியுள்ளது -பெபரல் அமைப்பு தெரிவிப்பு..!!

இலங்கையில் ஆறாவது நிறைவேற்று அதிகார முறைமை மிக்க ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தபால் மூல வாக்கெடுப்புகளின் போது முதல்கட்டமாக 4லட்சத்து 1ஆயிரத்து 118 செல்லுபடியாகும் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக பெபரல் அமைப்பு தெரிவித்துள்ளது. துபால் மூல வாக்கெடுப்பிற்காக நேற்றுமுன்தினமும் நேற்றும் தேர்தல்கள் செயலகத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருந்தன முதற்கட்டமாக நேற்றைய தினத்தில் அதிகபட்ச 47ஆயிரத்து 937 வாக்குகள் குருணாகல் மாவட்டத்தில் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஆகக்குறைந்த பட்சமாக வவுனியா மாவட்டத்தில் 4069 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக