செவ்வாய், 19 ஜனவரி, 2010

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் பேரணி..!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து அரச, தனியார் ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்றையதினம் பகல் கொழும்பில் பேரணியொன்றை நடத்தியுள்ளன. ஆயிரக்கணக்கான தொழிற்சங்க அங்கத்தவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நண்பகல் 12மணியளவில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது பிற்பகல் 1மணிவரை தொடர்ந்தது. ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் தமக்கிடையே இரகசிய ஒப்பந்தமொன்றை மேற்கொண்டு நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கோஷம் எழுப்பியதுடன், எதிர்க்கட்சிகளுக்கு எதிரான பதாகைகளையும் தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக