வியாழன், 7 ஜனவரி, 2010
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ யாழ்ப்பாணம் விஜயம்..!!
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய பசில் ராஜபக்ஷ அவர்கள் நேற்று யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். நேற்று காலை ஒன்பது மணியளவில் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்த பசில் ராஜபக்ச அவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் வரவேற்றனர். இச்சமயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொன்னாடை போர்த்தி சந்தன மாலையிட்டு பசில் ராஜபக்ச அவர்களை ஆரத்தழுவி வரவேற்றார். இதனைத்தொடர்ந்து பலாலி பாதுகாப்பு தலைமையத்தில் சர்வமத தலைவர்களை சந்தித்து அவர்களிடம் ஆசி பெற்ற பசில் ராஜபக்ச அவர்கள் சமயத்தலைவர்களுக்கு அன்பளிப்புப் பொருட்களையும் வழங்கினார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் பரவலாக இடம்பெறவுள்ள பல நிகழ்வுகளில் பங்குகொள்ளவுள்ள பசில் ராஜபக்ச அவர்கள் முக்கியமான அறிவிப்புக்கள் பலவற்றை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக