வியாழன், 7 ஜனவரி, 2010

களுவாஞ்சிக்குடி பிரதானவீதி நேற்று முதல் மக்கள் போக்குவரத்துக்கு திறந்துவைப்பு..!!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதானவீதி நேற்று முதல் மக்கள் போக்குவரத்திற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இருபது வருடங்களாக மூடப்பட்டிருந்த இந்தப் பிரதான பாதையில் இனிமேல் 24மணிநேரமும் மக்கள் போக்குவரத்தில் ஈடுபட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதைத் திறப்பின்மூலம் இதுவரையில் பயன்படுத்தப்பட்டு வந்த உள்வீதிகள் பொதுமக்களின் பாவனைக்கு இனி தேவைப்படாதென்றும், இந்த வீதித் திறப்பின்மூலம் மட்டக்களப்பு கல்முனைக்கிடையிலான பயணப் போக்குவரத்து இலகுவாக்கப்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக