வியாழன், 7 ஜனவரி, 2010

யாழ். வவுனியா ஏ9 வீதி நேற்று நள்ளிரவுமுதல் 24மணிநேரமும் திறப்பு..!!

யாழ்ப்பாணம் வவுனியா இடையிலான ஏ9வீதி பயணிகள் போக்குவரத்துக்காக நேற்று நள்ளிரவுமுதல் 24மணி நேரமும் திறந்துவிடப்படவுள்ளது. யாழ்.வேலணையில் இன்று இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோது ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ச எம்.பி இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். யாழ்.குடாநாட்டில் இடம்பெறவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரச்சார நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி எதிர்வரும் 10ம் திகதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார். இதன்போது உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் 75சதவீத மக்களை மீள்குடியமர்த்துவது தொடர்பான அறிவித்தலை ஜனாதிபதி விடுக்கவுள்ளார். புனர்வாழ்வு பெற்றுவரும் புலிகளின் உறுப்பினர்கள் 1000பேர் மிகவிரைவில் விடுதலை செய்யப்படவுள்ளனர் என்றும் பசில் ராஜபக்ச எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக