வெள்ளி, 1 ஜனவரி, 2010
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்புக் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில்..!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தாம் மேற்கொண்ட கலந்துரையாடல் வெற்றிகரமாக அமைந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையின்போது எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவளிக்குமாறு கோரப்பட்டபோது இதுபற்றி பரிசீலிப்பதாக தெரிவித்துள்ள தமிழ்க் கூட்டமைப்பினர் இதுபற்றி பரிசீலித்த பின்னர் தமது நிலைப்பாட்டை அறிவிப்பரென எதிர்பார்ப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை வடக்கு கிழக்கு மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் இப்பேச்சுவார்த்தை அமைந்ததாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதுடன், இந்தப் பேச்சுவார்த்தையின்போது பல்வேறு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக