புதன், 6 ஜனவரி, 2010

நிவாரணக் கிராமங்களிலுள்ளோரை மீள்குடியேற்ற முடியாமல் முகாம்களில் தடுத்து வைத்திருந்தவர் பொன்சேகாவே - அமைச்சர் ரிஷாத் பதியுதீன்..!!

இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் வாழும் மக்களை மீளக் குடியமர்த்த முடியாமல் முகாம்களில் தடுத்து வைத்திருந்தவர் அப்போதைய தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவே என்று மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரணச் சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சரத் பொன்சேகா பதவியிலிருந்து விலகிய பின்னர் எந்த விதமான தடைகளும் இன்றி இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை மீளக்குடியமர்த்த முடிந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது ஐ. தே. க. எம். பி. ரவி கருணா நாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளி க்கும் போதே அமைச்சர் ரிஷாத் பதியு தீன் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் மேலும் உரையாற்று கையில்:- சரத் பொன்சேகா தளபதியாக இரு ந்த காலத்தில் அம்பாறை மாவட்ட மக் களை அவர்களது சொந்த இடங்களுக்கு மீளக்குடியமர்த்த அனுப்பினோம். அதனை அனுமதிக்க முடியாது என்று அந்த மக்களை மீண்டும் முகாம்களுக்கு அனுப்பி வைத்தவர் சரத் பொன்சேகா. மக்களை மீளக் குடியமர்த்துவதை தடை செய்வதற்கான உத்தரவை சரத் பொன்சேகாவே அன்று படையினருக்கு விடுத்திருந்தார். இடம்பெயர்ந்த மக்களில் பெருந் தொகையானவர்கள் துரிதமாக மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். எஞ்சிய மக்களை இம்மாதம் 31ம் திகதிக்குள் மீளக் குடியமர்த்த சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். 31ம் திகதிக்குள் மீளக்குடியமர்த்தும் நோக்குடன் மிதி வெடிகள் அகற்றும் நடவடிக்கைகளும் துரிதமாக்கப்பட்டு ள்ளது. இந்த மக்களுக்கு தேவையான சகல வசதிகளும் ஆரம்ப காலம் தொடக்கம் வழங்கியுள்ளோம் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக