புதன், 6 ஜனவரி, 2010

இலங்கை சிங்களவர்களுக்கே சொந்தமானதென தெரிவிக்கவில்லை -ஜெனரல் பொன்சேகா..!!

எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராகப் போட்டியிடும் ஜெனரல் சரத்பொன்சேகா இலங்கை சிங்களவர்களுக்கு மாத்திரம் சொந்தமானது என எந்தவொரு வெளிநாட்டு ஊடகத்திற்கும் தான் கருத்து தெரிவிக்கவில்லை என பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு காத்தான்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இதனை தெரிவித்துள்ள அவர், தனது கருத்து அந்த ஊடகத்தில் திரிபுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நாட்டில் வாழும் சகல இனங்களுக்கும் இந்நாடு சொந்தமானது என்பதை திட்டவட்டமாக கூறுகிறேன் என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். இந்நாட்டில் வாழும் சகல இன மக்களும் சமாதானமாகவும், சமத்துவமாகவும் வாழவேண்டும் என்பதே எனது இலக்காகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 1990ம் ஆண்டு மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை, குருக்கள்மடத்தில் ஹஜ் யாத்திரிகர்கள் படுகொலை போன்ற சம்பவங்களையும் தனது உரையில் நினைவுபடுத்திய ஜெனரல் சரத் பொன்சேகா, அது குறித்து தனது கண்டனத்தையும் வெளிப்படுத்தினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக