புதன், 13 ஜனவரி, 2010
ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது..!!
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்தராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனமான மஹிந்த சிந்தனை2 பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெளியிடப்பட்டது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து உரை நிகழ்த்தினார். ஆசியாவிலேயே சுபீட்சம் அடைந்த நாடாக இலங்கையை விளங்கச் செய்யும் வகையிலான திட்டங்களை உள்ளடக்கியதாக மஹிந்த சிந்தனை2 வகுக்கப்பட்டுள்ளது. அவையான…உணவில் தன்னிறைவு அடைந்த நாடாக மாற்றியமைத்தல்சட்டம், ஒழுக்கம் மற்றும் நேர்மையுள்ள சமூகத்தை உருவாக்கல்அனைவருக்கும் வசிப்பிடம், குடிநீர், மின்சாரம் மற்றும் தொடர்புசாதன வசதிகள் கொண்ட நாடாக மாற்றியமைத்தல்முன்னேற்றம் காணப்பட்ட வகையிலான நெடுஞ்சாலைகளுடன் அனைவருக்குமான போக்குவரத்து வசதியுள்ள நாடாக உருவாக்கல்.வேற்றி கொண்ட நாட்டை மீண்டும் பிரிக்கவிடாது ஒரேநாடாக கட்டிக்காத்தல்அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தல்காடுகளையும் விலங்கினங்களையும் சுற்றாடலையும் பாதுகாக்கும் வகையில் இலங்கையை உருவாக்கல்இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கு முதலிடம் வழங்குதல்இவை உட்பட மேலும் பல முக்கிய விடயங்கள் மஹிந்த சிந்தனை2ல் உள்ளடக்கப்பட்டவையாகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக