வியாழன், 14 ஜனவரி, 2010
ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களின் பஸ்வண்டி மீது துப்பாக்கி பிரயோகம்..!!
இலங்கையின் தென்மாகாண தங்காலை பகுதியில் நேட்று இடம்பெற்ற தேர்தல் வன்முறை துப்பாக்கி பிரயோகமொன்றில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 8பேர் காயமடைந்துள்ளனர் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டம் ஒன்றுக்கு சென்றுக் கொண்டிருந்த பஸ் ஒன்றின் மீதே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 26ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் இடம்பெற்ற முதலாவது துப்பாக்கி பிரயோக தேர்தல் வன்முறை சம்பவம் இதுவென தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து இன்றுவரை நாடளாவிய ரீதியில் 419 தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக