பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் நிகழ்வதாக தெரிவிக்கப்படுகிறது. வேலுப்பிள்ளையின் பூதவுடலை வல்வெட்டித்துறைக்கு கொண்டு சென்று இறுதிக் கிரிகைகள் செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் இராணுவத் தரப்பு அளித்துள்ளதாக தெரியவருகிறது.
நீண்டகாலமாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த, திருவேங்கடம் வேலுப்பிள்ளை தமது 86 வது வயதில் 06/01/2010 அன்று காலமானார். கடந்த மே மாதம் நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மோதல் வலயத்திலிருந்து இராணுவத்தினரிடம் சரணடைந்த வேளை வேலுப்பிள்ளை மற்றும் அவரது மனைவி ஆகியோர் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக