வியாழன், 7 ஜனவரி, 2010
கைது செய்யப்பட்டுள்ள புலி சந்தேகநபர்களை விடுவிக்க நடவடிக்கை..!!
புலிகள் என சந்தேகிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி கைதுசெய்யப்பட்டுள்ள 700 புலிச் சந்தேகநபர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்கீழ் இதுவரையில் 46பேர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், இன்றையதினம் 60சந்தேகநபர்கள் விடுவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை புலிகள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக