ஞாயிறு, 3 ஜனவரி, 2010

மறைந்த அமைச்சர் பி.சந்திரசேகரனின் பூதவுடலுக்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி நிகழ்வுகள்..!!

தேசிய அரசியலில் ஒரு தலைவராக திகழ்ந்த அமைச்சர் சந்திரசேகரன் தனது கட்சியினூடாக மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பாரிய போராட்டங்களை நடத்தியதுடன் சற்றும் தளராத இறுக்கமான கொள்கையையும் கொண்டிருந்தார் என அரசியல் தலைவர்கள் நேற்று தெரிவித்துள்ளனர். மறைந்த அமைச்சர் பி.சந்திரசேகரனின் பூதவுடலுக்கு நேற்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், எம்.பிக்கள், அஞ்சலி செலுத்தினர். சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார, பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா, அமைச்சர்களான நிமால் சிறிபால டி சில்வா, தினேஷ் குணவர்த்தனா, ஜோன் செனவிரட்ன, பேரியல் அஷ்ரப், ஏ. எச். எம். பௌஸி, பந்துல குணவர்தன, டிலான் பெரேரா, ஆளுநர் அலவி மௌலானா, பிரதியமைச்சர் எம். எஸ். செல்லச்சாமி, ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர், ஜனாதிபதியின் முஸ்லிம் விவ காரங்களுக்கான ஆலோசகர் நியாஸ் மௌலவி ஆகியோரும் அமைச்சர் சந்திரசேகரன் குறித்த நினைவுகளை மீட்டி கருத்துத் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக