ஞாயிறு, 17 ஜனவரி, 2010

கனடாவில் கைது செய்யப்பட்ட 76பேரில் மேலும் 25பேரை விடுவிக்க கனேடிய லங்குவேர் அரசு தீர்மானம்..!!

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கனடாவுக்குள் நுழையமுற்பட்டவேளை சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட 76பேரில் மேலும் 25பேரை விடுதலைசெய்ய கனேடிய லங்குவேர் அரசு நிர்வாகம் தீர்மானித்துள்ளது. ஓஷியன் லேடி என்ற கப்பலின்மூலம் கனடா சென்ற இலங்கைத் தமிழர்கள் அங்கு அகதி அந்தஸ்த்து கோரியபோதே இவர்கள் சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர். புலிகளுக்கும் குறித்த 25இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் நேரடியான தொடர்பு இருக்கலாம் என்பதன் காரணமாகவே இவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர். இதுகுறித்த விசாரணையைக் கனேடியப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டனர். அவர்களின் விசாரணைகளின் பின்னர் தடுத்துவைக்கப்பட்டிருந்த 25பேருக்கும் புலிகளுடன் தொடர்பு இல்லையென்ற நிலையில், அவர்கள் அகதி அந்தஸ்துக்கோரியே கனடா வந்துள்ளனர் எனக் கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையிலேயே இவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் தற்சமயம் எடுக்கப்பட்டுவருகின்றன ஏற்கனவே 09பேர் விடுவிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக