ஞாயிறு, 27 டிசம்பர், 2009
வவுனியா புத்தளம் பகுதிகளில் டெங்கு நோய் பரவலைத் தடுப்பது தொடர்பில் கலந்துரையாடல்..!
வவுனியா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுப்பது தொடர்பிலான விசேட பேச்சுவார்த்தை இன்றுபிற்பகல் வவுனியா வைத்தியசாலையில் நடைபெற்றுள்ளது. நாட்டின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் வவுனியா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் பொதுச் சுகாதார பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மகிபால தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக கழிவுப்பொருள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இன்று பேச்சுவார்த்தையின் போது முக்கிய கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தவிர டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகளை அழிப்பதற்காக புகையடிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதாக டொக்டர் பாலித்த மகிபால தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக