ஞாயிறு, 27 டிசம்பர், 2009
வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் 40பேரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை..!!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்காக வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை இலங்கைக்கு வரவழைப்பது தொடர்பாக ஆரம்பக்கட்டப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார். இந்நிலையில் தேர்தல் கடமைகளுக்காக 40வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் நடவடிக்கைகளின்போது இடம்பெறும் அசம்பாவிதங்களை இதன்மூலம் தீர்த்துக்கொள்ள முடியுமென அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக