சனி, 5 டிசம்பர், 2009
வன்னியில் சிக்கிய தமது வாகனங்களை மீட்டுத்தருமாறு உரிமையாளர்கள் வேண்டுகோள் !
வன்னிப்பிரதேசத்தில் மோதல்களில் சிக்கியிருந்த பொதுமக்களுக்காக அரசாங்கத்தின் உணவு விநியோக நடவடிக்கையின்போது அங்கேயே சிக்கிக்கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட ட்ரக் வாகங்களை மீட்டுத் தருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட அவற்றின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதையடுத்து, கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அரசாங்கம் துரிதமீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் அந்தப் பிரதேசத்திற்கு வேறு தேவைகளுக்காக குறித்த வாகனங்களில் சென்றுவந்த பலரும் யுத்த காலத்தில் அங்கு சென்ற இந்த வாகனங்கள் பலவும் சேதமடைந்த நிலையில் அங்கு கிடப்பதைக் கண்டதாகத் தெரிவித்துள்ளனர். இவ்வாறான வாகனங்களை இழந்துள்ள உரிமையாளர்கள் பெரும் சிரம நிலைமைக்குத் தள்ளப்பட்டு துயரமடைந்துள்ளனர். பலர் கடன் சுமைக்கும் உள்ளாகியுள்ளனர். எனவே தமது வாகங்களைப் பெற்றுத்தருமாறு கோரியுள்ளனர். இதேவேளை வன்னியை நோக்கி இடம்பெயர்ந்தபோது தாம் கொண்டு சென்ற உழவு இயந்திரங்கள், லேண்ட் மாஸ்டர்கள், மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்கள், வேன்கள் உள்ளிட்ட தமது வாகனங்கள் வன்னியில் காணப்படுவதாகவும், அவற்றை மீட்டுத் தருமாறும் மக்களால் கோரப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக