சனி, 5 டிசம்பர், 2009

2008 வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் அடையாள அட்டை இல்லாதோர்க்கு விசேட அடையாள அட்டைகள் !

2008ம் ஆண்டு பதிவுசெய்யப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் பெயர்குறிப்பிடப்பட்டு ஆனால் தேர்தல் ஆணையாளரினால் அங்கீகரிக்கப்படும் ஏதாவதொரு அளடையாள அட்டை இல்லாதவர்களுக்கு ஆட்பதிவு திணைக்களத்தினால் விசேட அடையாளஅட்டைகள் வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 10ம் திகதிமுதல் ஆரம்பமாகவுள்ளன. இந்த விசேட அடையாளஅட்டையை பெற தகுதியுடையோர் தமது பிரதேச கிராமசேவகரை 10ம் திகதிக்கு பின்னர் சந்தித்து விண்ணப்பப்படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம். ஆட்பதிவு திணைக்களத்தினால் இலவசமாக வழங்கப்படும் விசேட அடையாள அட்டைகள் யாவும் ஜனவரி 15ம் திகதிக்கு முன்னர் வழங்கப்பட்டுவிடும். விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டவுடனேயே அந்தந்த பிரதேச செயலகங்கள் ஊடாக விசேட அடையாள அட்டைகள் உடனுக்குடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக