ஞாயிறு, 27 டிசம்பர், 2009
திருச்சி சென்ற தமிழ்க்கூட்டமைப்பு எம்.பி சிவாஜிலிங்கம் நாடு கடத்தல்..!!
தமிழ்நாடு தஞ்சாவூரில் இன்றுமுதல் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொள்ள விமானம்மூலம் திருச்சி சென்றிருந்த தமிழ்க் கூட்டமைப்பின் என்.கே. சிவாஜிலிங்கம எம்.பி குடியேற்றத் துறையால் அனுமதி மறுக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளராக போட்டியிடும் என்.கே. சிவாஜிலிங்கம் இன்று அதிகாலை 3.00மணிக்கு விமானம்மூலம் திருச்சி சென்றடைந்திருந்தார். ஆனால் அவரை விமான நிலையத்திலிருந்து வெளியேசெல்ல அனுமதி மறுத்த குடியேற்றத்துறை அதிகாரிகள், அவரை தடுத்து வைத்துள்ளனர். சிறிது நேரத்தில் திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் ஏற்றி அனுப்பி விட்டுள்ளனர். அங்கிருந்து சிவாஜிலிங்கம் கொழும்பு செல்ல வேண்டும். என்ன காரணத்திற்காக சிவாஜிலிங்கத்தை நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்தனர் என்று குடியேற்றத்துறை அவருக்குத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக