திங்கள், 28 டிசம்பர், 2009
கிளிநொச்சி, முல்லை ஆஸ்பத்திரிகள் சகல வசதிகளுடன் மீண்டும் திறப்பு..!!
புலிகள் இயக்கத்தினால் சேதமாக்கப்பட்ட கிளிநொச்சி பிரதான ஆஸ்பத்திரி அடங்க லான கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள பல பிரதான ஆஸ்பத்திரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இவற்றுக்குத் தேவையான மருத்துவர்கள் அடங்கலான ஆளணி மற்றும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்ரசிறி தெரிவித்தார். 100 படுக்கையறை வசதிகளுடன் கிளிநொச்சி வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டு ள்ளதோடு எக்ஸ்ரே வசதி, இரத்த வங்கி வசதி என்பன வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். முழங்காவில் ஆதார வைத்தியசாலையும் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளதோடு இங்கு 03 மருத்துவர்கள் உட்பட பணி யாளர்கள் சேவையாற்றி வருகின்றனர். முல்லைத்தீவு வைத்தியசாலையும் மீண்டும் இயங்கத் துவங்கியுள்ளதோடு வைத்தியசாலைக்குத் தேவையான மருத்துவ அதிகாரிகள் மற்றும் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 04 அம்பியூலன்ஸ் வண்டிகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக