ஞாயிறு, 27 டிசம்பர், 2009
புலிகளால் எடுக்கப்பட்ட முடிவு தான் தமிழ்மக்கள் எதிர்கொள்கின்ற மோசமான நிலைமைகளுக்கும், அழிவுகளுக்கும் காரணம் -இரா.சம்பந்தன்
2005ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ்மக்களின் சார்பில் புலிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற மோசமான நிலைமைகளுக்கும், இன்றைய அழிவுகளுக்கும் காரணம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக தான் புலிகளிடம் நீண்டநேரம் வாதிட்டதாகக் கூறும் இரா.சம்பந்தன், அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்காவிட்டால், நிச்சயமாக தமிழ்மக்கள் ஒரு அரசியல் தீர்வை நோக்கிச் சென்றிருக்கலாம் என்றும், மக்களின் வாழ்விலும் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறியுள்ளார். இந்த தடவை ஜனாதிபதி தேர்தல் குறித்த முடிவுகளை எடுக்கின்றபோது இந்த விடயத்தை எல்லாரும் மனதில் கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலின் முக்கிய வேட்பாளர்களைச் சந்தித்து பல விடயங்கள் குறித்து ஆராய்ந்துவருவதாக கூறிய இரா.சம்பந்தன் அவர்கள், யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து தாம் இன்னமும் முடிவு எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக