புதன், 30 டிசம்பர், 2009

வெள்ளவத்தையில் மரிய அன்னையின் கைகள் தெரியும் அதிசயம்...!!

கொழும்பு வெள்ளவத்தையிலும் அன்னைமரியின் கைகள் தெரியும் அதிசயம் நிகழ்ந்துள்ளது. அன்னை மரியின் உருவப்படத்திலிருந்து கைகள் இரண்டு வெளிப்பட்டுள்ளன. வெள்ளவத்தை, பெர்னாண்டோ வீதியிலுள்ள கனேந்திரன் என்பவரின் வீட்டில் நிகழ்ந்த அதிசயத்தினை நாம் கமராவுக்குள் அடக்கிக் கொண்டோம். கிறிஸ்மஸ் தினமான கடந்த 25ம் திகதி மாலை 3மணியளவில் குடும்பத்தினர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த சமயம் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையில் இந்த அதிசயம் நிகழ்ந்ததாக வீட்டார் கூறுகின்றனர். 2006ம் ஆண்டளவில் புனித மடுதேவாலயத்தில் இந்தப் பிரார்த்தனை புத்தகத்தை வாங்கியுள்ளனர். தொடர்ச்சியாக செய்துவந்த புனிதமான பிரார்த்தனையே இதற்குக் காரணம் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டனர். திருமலை என்.சீ வீதியிலுள்ள மரிய அன்னை ஆலயத்திலுள்ள படத்திலும் யாழ். ஆனைக்கோட்டை வராளி கோவிலடியிலுள்ள வீடு ஒன்றிலும் இதேபோன்ற சம்பவம் அண்மையில் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக