சனி, 26 டிசம்பர், 2009
எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்க் கூட்டமைப்பு சந்திப்பு..!
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் இன்றையதினம் தீர்மானகரமான பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகல் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதில் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இந்த சந்திப்பின்போது கடந்த காலத்தை மறந்து, இலங்கையர் என்ற தேசிய அடையளத்துடன் கூடிய செயற்பாடுகளை முன்னெடுக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இத்தீர்மானம் ஜனாதிபதித் தேர்தலில் தீர்மான விடயமாக அமையும் என கூறப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக