செவ்வாய், 15 டிசம்பர், 2009
ரஜீவ்காந்தி படுகொலை வழக்கு விசாரணைகள் முடிவுறுத்தப்படவுள்ளது -இந்தியத் தகவல்கள் !
இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி படுகொலை வழக்கு விசாரணைகள் முடிவுறுத்தப்பட உள்ளதாக இந்திய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.டி இந்த வழக்கின் பிரதான சந்தேக நபர்களான புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்ததனைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்படுக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்துள்ளதாக இலங்கை அரசாங்கம், இந்தியாவிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. உத்தியோகபூர்வ அறிவிப்பினைத் தொடர்ந்து வழக்கு விசாரணைகளை முடிவுக்குக் கொண்டுவர முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக