விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுடன் இயக்குனர் சீமான் இருக்கும் படம் சமீபத்தில் ஒரு வார இதழில் வெளியானது. இதனால் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் பிரமுகர் சபீர் பொலிஸ் கமிஷனரிடம் இன்று மனு கொடுத்தார்.
இது பற்றி தெரியவருவதாவது:-
விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனுடன் டைரக்டர் சீமான் இருக்கும் படம் சமீபத்தில் ஒரு வார இதழில் வெளியானது.
அண்மையில் இயக்குனர் சீமான் அளித்துள்ள பேட்டியில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுக்கப் போவதாக கூறி இருந்தார்.
அப்போது சீமான், தமிழின விடுதலைக்காக தன் உயிரையே கொடுக்க முன்வந்த பிரபாகரன்தான் உண்மையான தளபதி. என் குடும்பமே அழிந்தாலும் என் இனத்திற்காக போராடுவேன் என்று வந்த பிரபாகரன்தான் உண்மையான தலைவன்.
சிங்கள இன வெறியர்களை எதிர்த்துப் போராடிய தலைவர் பிரபாகரன் இன்னும் உயிரோடு இருக்கிறார். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலையை ஏற்படுத்தியவர் தலைவர் பிரபாகரன்’’ என்று பேசினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் பிரமுகர் இளையான்குடி சபீர், சென்னை பொலிஸ் கமிஷனரிடம் இன்று மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:- இயக்குனர் சீமான், விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் கட்டளைப்படி செயல்படுவதாக ஒரு பேட்டியில் கூறி உள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார். இந்த மனு மீது நடவடிக்கை எடுப்பது பற்றி உயர் பொலிஸ் அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். இயக்குனர் சீமான் மீது நடவடிக்கை எடுப்பது பற்றியும் ஆலோசித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக