சனி, 19 செப்டம்பர், 2009

புலிகளின் தகவல்கள் அடங்கியவை என்று கருதப்படும் இரண்டு லப்டப் கணணிகள் மீட்பு!

புலிகளின் தகவல்கள் அடங்கியவை என்று கருதப்படும் இரண்டு லப்டப் கணணிகள் அனுராதபுரம் பகுதி வீடொன்றிலிருந்து நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த வடமத்திய மாகாண விசேட குற்றத்தடுப்புப் பொலீசார் குறித்த கணிணிகள் தொடர்பாக கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவல் ஒன்றினையடுத்தே கணணிகள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அநுராதபுரம் மூன்றாம் பிரிவிலுள்ள வீடொன்றிலிருந்து இவை மீட்கப்பட்டுள்ளன. குறித்த கணிணிகள் தொடர்பாக வீட்டு உரிமையாளர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது, இவ்விரு கணிணிகளும் இராணுவ அதிகாரியொருவருக்கு சொந்தமானவையென்று கூறப்பட்டது. இதனையடுத்து இது தொடர்பிலான விசாரணைகளை வடமத்திய மாகாண விசேட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக