புதன், 16 செப்டம்பர், 2009

மீள்குடியேற்ற மக்களை கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் சந்திப்பு!



வவுனியா இடைத் தங்கல் முகாமிலிருந்து மீள் குடியேற்றத்திற்காக அழைத்து வரப்பட்டு தற்போது குச்சவெளி பிரதேச பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ள திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பங்களை நேற்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் நேரில் சென்று பார்வையிட்டு உரையாடினார்.மீள் குடியேற்றத்திற்காக அழைத்து வரப்பட்டுள்ள தாங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படாமல் 4 - 5 நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் தொடர்ந்தும் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் வந்து பார்வையிடுவதற்குக் கூட அனுமதி மறுக்கப்படுவதாகவும் இம்முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் முதலமைச்சரிடம் சுடடிக் காட்டினர்.
பாதுகாப்பு தொடர்பான விபரங்களைப் பதிவு செய்வதன் காரணமாகவே மக்களை வீடுகளுக்கு அனுப்பி வைப்பதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு தரப்பு மூலம் தன்னால் அறிய முடிந்துள்ளதாகவும் வீடுகளுக்கு அனுப்பும் வரை உறவினர்கள் பார்வையிடுவதற்கான அனுமதியை அளிப்பது தொடர்பாக உரிய பாதுகாப்பு அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக