வெள்ளி, 18 செப்டம்பர், 2009

லின் பாஸ்கோ இன்று ஜனாதிபதியை அலரி மாளிகையில் சந்தித்தார்


இலங்கைக்கான் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐ. நா. சபையின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி பொதுச்செயலாளர் லின் பாஸ்கோ இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, இடர் முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க, நீதித்துறை அமைச்சர் மிலிந்த மொரகொட ஆகியோர் உட்பட மற்றும் சிலர் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பின் போது, குறிப்பாக வவுனியா நலன்புரி நிலையங்களில் உள்ள இடம்பெயர் மக்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக