சனி, 19 செப்டம்பர், 2009

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது

யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் வட மாகாண விளையாட்டு விழாவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோர் வைபவ ரீதியாக வெள்ளிக்கிழமை தினம் (18) அன்று ஆரம்பித்து வைத்துள்ளனர். மேற்படி விழாவின் போது சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி அவர்கள் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோ அவர்கள் விளையாட்டு மற்றும் பொது பொழுது போக்குகள் அமைச்சின் பணிப்பாளர் லியனகம அவர்கள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கே. கணேஸ் அவர்கள் மற்றும் யாழ் மாவட்ட பிரதேச செயலாளர்கள் பிரதி கல்விப் பணிப்பாளர் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் பாடசாலை மாணவ மாணவிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விளையாட்டு விழா ஆரம்ப தினத்தின் போது பல்வேறு பாடசாலைகளின் நடனம் மற்றும் கலாசார நிகழ்வுகள் மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி மாணவிகளின் உடற்பயிற்சி கண்காட்சி மன்னார் மற்றும் யாழ் மாவட்டங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி மற்றும் ஆண்கள் பெண்களுக்கான 1500 மீற்றர் மரதன் ஓட்டப்போட்டி என்பனவும் நிகழ்ந்தன.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக