சனி, 19 செப்டம்பர், 2009

நடிகை அனார்கலிக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த வேட்பாளர் பிணையில் விடுதலை


தனக்குகொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறி சுதந்திர ஐக்கிய முன்னணி சார்பில் தென்மாகாண சபை தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் நடிகை அனார்கலி காலி மஜிஸ்ரேட் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார் இதன் அடிப்படையில் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தபடி தென்மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் மற்றுமொரு வேட்பாளரான நிஷாந்த முத்துஹேட்டகமவைக் கைதுசெய்யுமாறு காலி பிரதம மஜிஸ்ரேட் நீதவான் உ;த்தரவிட்டிருந்தார். இன்று நிஷந்த காலி பிரதம மஜிஸ்ரேட் நீதிமன்றில் சரணடைந்தார் இனிமேல் இதுபோன்ற அச்சுறுத்தல்களில் ஈடுபடக் கூடாது என அவரை கடுமையாக எச்சரித்த பிரதம மஜிஸ்ரேட் நீதவான் 2லட்சம் சரீரப் பிணையில் செல்ல அனுமதித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக