திங்கள், 21 செப்டம்பர், 2009

இலங்கையர்களும் இருக்கலாமென சந்தேகிக்கப்படும் படகொன்று அவுஸ்திரேலியக் கடற்படையினரால் மீட்பு

இலங்கையர்களும் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச்சென்ற படகொன்றினை அவுஸ்திரேலிய கடற்படையினர் நேற்று கைப்பற்றியுள்ளனர். அவுஸ்திரேலியாவின் வடக்கிலுள்ள கொக்கோஸ்கீலிங் தீவுகளுக்கு அப்பால் 630கிலோமீற்றா தொலைவிலுள்ள கடற்பிராந்தியத்தில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த இருவார காலத்தினுள் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முனைந்த 6வது படகு இதுவென்று அவுஸ்திரேலியக் கடற்படையினர் கூறியுள்ளனர். இவர்கள் தற்போது கிறிஸ்துமஸ் தீவிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய உள்துறையமைச்சர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக