வெள்ளி, 19 டிசம்பர், 2014

மஹிந்தவின் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க சல்மான் கானுக்கு அழைப்பு..!!

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின் போது மஹிந்த ராஜபக்சவின் பிரசாரத்தில் பங்கேற்குமாறு பொலிவூட் நடிகர் சல்மான் கானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விடுத்துள்ளார்.

சல்மானுடன் சிறந்த நட்பைக் கொண்டுள்ள நாமல், ஏற்கனவே பல தடவைகளாக சல்மான் கானை இலங்கைக்கு அழைத்துள்ளார்.

எனினும் தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்புக்கு சல்மான் கான் இன்னும் பதில் வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக