செவ்வாய், 5 அக்டோபர், 2010

எனது வாழ்க்கையைத் தியாகம் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்-சரத் பொன்சேகா..!

எனது வாழ்க்கையைத் தியாகம் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சரத் பொன்சேகா மற்றொரு வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு சிறைச்சாலையிலிருந்து பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டபோது, ஜனநாயகத்திற்காக தான் போராடப்போவதாக சூளுரைத்துள்ளார். கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே குழுமி நின்ற தனது ஆதரவாளர்கள் மத்தியில் இதனைத் தெரிவித்துள்ள பொன்சேகா தனது வாழ்க்கையைத் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாகவும் ஜனநாயகத்திற்கான போராட்டத்தைக் கைவிடப்போவதில்லையெனவும் கூறியுள்ளதாக ஏ.எவ்.பி.செய்திச் சேவை தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக