இலங்கையின் லஞ்ச ஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழுவின் ஆணையாளருக்கு எதிரான குற்றச்சாட்டை விசாரணைக்கு எடுக்காமை குறித்து போராட்டம் நடத்தப் போவதாக ஜே வி பி எச்சரித்துள்ளது.ஆணையாளர் பாலபட்டபெந்தி, உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்த வேளையில் மேற்கொண்டதாக கூறப்படும் ஊழல்கள் தொடர்பிலேயே இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அவர் தலைமை வகிக்கும் லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவிலேயே செய்யப்பட்டுள்ள இந்த முறைப்பாடு பல மாதங்களாக விசாரிக்கப்படாமல் இருந்து வருகிறது.
உயர்நீதிமன்ற நீதிரசராக இருக்கும் போதுää வியாபாரி ஒருவரின் வாகனத்தை சுங்கவரி செலுத்தாமல் விடுவித்துக்கொள்ள உதவினார் என்று குற்றச்சாட்டு பாலபட்டபெந்தியின் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமக்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக பாலபட்டபெந்தி தற்காலிகமாக பதவி விலகி குழு ஒன்றை நியமித்து விசாரணைகளை நடத்தவேண்டும் என்று ஜே வி பி கோரியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக