திங்கள், 6 அக்டோபர், 2014

கோபியின் மனைவி சுவிஸ் நாட்டிற்கு பயணிக்க தடை! விமானநிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்!!


விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்று கூறப்பட்டு இலங்கை படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட கோபி என்ற கஜீபனின் மனைவி நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு தடைவிதிக்கப்பட்டது.
கஜீபன் சர்மிளா நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக சுவிட்ஸர்லாந்துக்கு செல்லவிருந்த பயணத்துக்கு தடைவிதிக்கப்பட்டது.

சுவிட்ஸர்லாந்துக்கு செல்வதற்கான உரிய வீசாவை கொண்டிருந்த போதும் அவரது கணவர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதால் அவருக்கு
பயணத்தடை விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சர்மிளா, சிறிது நேரம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது சுவிஸ் அதிகாரிகள் சென்று அவரை விடுவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளை மீள்கட்டியெழுப்புவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த கோபி கடந்த ஏப்ரலில் பதவியாவுக்கு அப்பால் உள்ள காட்டில் வைத்து படையினரால் கொல்லப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக