இலங்கையின் நாடாளுமன்ற அமர்வுகளை நேரடியாக ஒலி, ஒளி பரப்புமாறு ஐக்கிய தேசியக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.நேற்று நாடாளுமன்றத்தில் வைத்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கட்சி தலைவர்களின் சந்திப்பு இடம்பெற்றபோது சபாநாயகரிடம் இந்தக்கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பரீட்சார்த்தமாக நாடாளுமன்ற அமர்வுகள் ஒலி, ஒளி பரப்பு செய்யப்பட்டன. எனினும் அதில் அரசாங்கத்துக்கு பாதக நிலை ஏற்பட்டதை அடுத்து அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் பார்வையாளர்கள் மத்தியில் பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதற்காகவே அந்த ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாக அரசாங்கம் காரணம் கூறியது.
இதனையடுத்து சில செம்மையாக்கல்களுடன் ஒலி, ஒளிபரப்பை மேற்கொள்ள சபாநாயகர் இணக்கம் வெளியிட்டிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக