ஞாயிறு, 5 அக்டோபர், 2014

ஆட்டோவுடன் மோதிய இராணுவ ட்ரக் வண்டி: ஒருவர் பலி! 4 பேர் காயம்!!

கொடிகாமம் கெற்பெலி பகுதியில் ஆட்டோவுடன் இராணுவ ட்ரக் வண்டி மோதியதில் ஸ்தலத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று இரவு 7.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பிறந்ததின வீட்டொன்றுக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பி கொண்டிருந்த வேளையிலேயே  இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் கச்சாயைச் சேர்ந்த குமாரசாமி திவாகரன் (வயது 28) என்ற இளைஞனே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக
கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

கொடிகாமத்தைச் சேர்ந்த கே.நிலக்சன் (வயது 21), கச்சாயைச் சேர்ந்தவர்களான உதயகுமார் இதேநிதன் (வயது 28), சிவகுமார் வின்சன் (வயது 19) மற்றும் எழுதுமட்டுவாளைச் சேர்ந்த சின்னத்தம்பி தபேந்திரன் (வயது 23) ஆகியோர் காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸாரும், இராணுவ பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக