தடுத்து வைக்கப்பட்டுள்ள சப்ரகமுவ பல்கலைக்கழக தமிழ் மாணவரை விடுதலை செய்யுமாறு கோரி நாளை ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளது.சப்ரகமுவ பல்கலைக்கழக தமிழ் மாணவரான செந்தில்குமார் எதுவித குற்றச்சாட்டுகளும் இன்றி பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதுவரை அவர் விடுதலை செய்யப்படவில்லை.
இதனைக் கண்டித்துள்ள பல்கலைக்கழக அனைத்து மாணவர் ஒன்றியம், அவரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக