நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தை சீனாவுக்கு கையளிப்பதற்கான தீர்மானத்தை அமைச்சரவை மேற்கொள்ளவில்லையென திட்டவட்டமாக மறுக்கும் அரசு, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில்தான் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இந்தியாவுக்குத் தாரைவார்க்கப்பட்டு நாடு காட்டிக்கொடுக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியது. கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை
அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய இம்முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த மேற்படி விடயங்களைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:- "நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் 3ஆம் கட்ட வேலைகளை இலங்கைக்கு வரும் சீன ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதன் மூலம் 900 மெகா வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்திசெய்ய முடியும். இதன் பின்னர் நாட்டில் 365 நாட்கள் வரட்சி நிலவினாலும் தடையில்லாது மின்சாரத்தை வழங்கமுடியும். எமது நாட்டுக்கு அனல் மின் உற்பத்தி நிலையம் அவசியமானதாகும்.
ஆனால், இதனை எந்தவொரு அரசினாலும் நிறைவேற்ற முடியாமல் போனது. எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியிலேயே நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி தொடர்பான கனவு நனவானது. சீன இதற்கு முழு ஆதரவையும் நிதியுதவியையும் தொழில் நுட்பத்தையும் மனித வளத்தையும் வழங்கியது. நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தை சீன நிறுவன நிர்வாகத்திற்கு வழங்குவதற்கோ அல்லது சீன அரசிடம் கையளிப்பதற்கோ அமைச்சரவையில் கலந்தாலோசிக்கப்படவில்லை. சீன அரசிடம் கையளிப்பதற்கான எந்தவிதமான தீர்மானத்தையும் அரசு எடுக்கவும் இல்லை" - என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக