செவ்வாய், 16 செப்டம்பர், 2014

முறிகண்டியில் வாகன விபத்து!- இரண்டு பேர் பலி! மூன்று பேர் காயம்!!

கிளிநொச்சி முறிகண்டியில் நேற்று இரவு 11.40 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் பலியானதுடன் மூவர் காயமடைந்தனர்.

74 வயதான மாணிக்கசோதி அபிமன்யசிங்கம் மற்றும் 70 வயதான செல்லத்துரை செல்வக்குமார் ஆகியோரே சம்பவத்தில் பலியாகினர்.

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குறித்த 5பேர்
பயணித்துக்கொண்டிருந்த டொல்பின் ரக வான் யானை ஒன்றுடன் மோதியே விபத்துக்குள்ளானதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

காயமடைந்த மூன்று பேரும் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை நேற்று  முற்பகல் முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற மற்றும் ஒரு சம்பவத்தில் பஸ் நடத்துனர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக