ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் விபத்தில் பலி!!


இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் இன்று இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.
இன்று மாலை இரத்தினபுரி பலாங்கொட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஹோமாகமவை சேர்ந்த துஸித்தா ருவண்குமாரி என்ற இந்த பெண் பணிப்பாளர் ஊவா மாகாண தேர்தல் கடமைகளுக்காக சென்றுவிட்டு வீடு
திரும்பிக் கொண்டிருக்கையிலேயே விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.

அரச போக்குவரத்து பஸ் ஒன்றிலேயே அவர் பயணம் செய்த வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக