வியாழன், 18 செப்டம்பர், 2014

வவுனியாவில் இந்திய துணைத் தூதரக ஏற்பாட்டில் நடன ஆற்றுகை நிகழ்வு!!

வடமாகாணத்தில் உள்ளூர் நுண்கலை மாணவர்களுக்கும் கலைஞர்களுக்கும் களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கில் யாழ். இந்தியத் துணைத்தூதரகம் இந்திய கலாசார அமைச்சின் அனுசரணையுடன் கலை நிகழ்வுகளை நடத்தி வருகிறது.

இதன்படி இவ்வருடமும் நான்கு கலை நிகழ்வுகளை நடத்தத் தூதரகம் ஒழுங்கு செய்துள்ளது.

முதலாவது நிகழ்வு, வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரியினால் ஆற்றுகை செய்யப்படும் நடன நிகழ்ச்சியாக வவுனியா நகர சபை, புதிய கலாசார மண்டபத்தில் எதிர்வரும் 21 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை இடம்பெறவுள்ளது.

கலாநிதி அகளங்கன் தலைமையில் நடை பெறவுள்ள இந்நிகழ்வில், பிரதம
விருந்தினராக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களும், கௌரவ விருந்தினராக இந்திய துணைத்தூதுவர் சு.தட்சணாமூர்த்தி அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.மோகநாதன் அவர்களும், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா அவர்களும், வவுனியா தெற்கு வலய கல்வி பணிப்பாளர் அன்டன் சோமராஜா அவர்களும் கலந்து கொள்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக