திங்கள், 15 செப்டம்பர், 2014

முறிகண்டி ஏ9 வீதியில் கோர விபத்து: பஸ் சில்லில் நசுங்கி நடத்துனர் பலி!! (படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவு முறிகண்டி பகுதியில் ஏ-9 வீதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்தில் பஸ்ஸின் நடத்துனர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

முற்பகல் 11.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் தனியார் பஸ் நடத்துனர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பஸ்,
முறிகண்டி பிள்ளையார் கோயிலுக்கு அண்மையில் வளைவு ஒன்றில் வேகமாகத் திரும்பியுள்ளது.

இதன்போது, பஸ்ஸின் முன்வாசலில் நின்ற நடத்துனர் தவறி கீழே வீழ்ந்த நிலையில் சில்லுக்குள் அகப்பட்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக