ஞாயிறு, 6 ஜூலை, 2014

இலங்கையில் தொடரும் சீனாவின் ஆதிக்கம்...!!!

இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய இரண்டு நாடுகளுக்குமிடையிலான சுற்றுலா துறையை அதிகரிக்க சீனா நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய இரு நாடுகளுக்குமிடையிலான சுற்றுலாத்துறையினை மேம்படுத்த சீனா மேலும் பல நேரடி விமான சேவைகளுக்கான அனுமதியினை வழங்கியுள்ளது.

அண்மைக்காலமாக சீனாவிலிருந்து இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் நன்மை கருதி, சீனாவின் தெற்குப் பகுதி மற்றும் கொழும்பினை இணைக்கும் வகையில் இடைவிடாத விமான சேவையினை முன்னெடுக்க ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.


ஏற்கனவே சீனாவின் பீஜிங், ஷங்காய், குவாங்ஷோ மற்றும் கொங்கொங்கிற்கு கொழும்பிலிருந்து நேரடி விமான சேவை இடம்பெற்று வரும் நிலையில் சோங்கிங் நகரத்துக்கும் விமான சேவை நடத்தப்படுகின்றது.

இந்த வருடத்தின் முதல் காலாண்டில், சீனாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த சீனப்பிரஜைகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக