இலங்கை தமிழர்களின் அரசியல் ஏகப்பிரதிநிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.தென்னாபிரிக்காவின் அனுசரணையுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நல்லிணக்கப் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக வெளியான தகவல் குறித்து இன்று கொழும்பில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அமைச்சர் தமது கருத்தை வெளியிட்டார்.
அரசாங்கத்தை பொறுத்தவரையில் தன்னிச்சையாக கூட்டமைப்புடன் பேச்சு நடத்த முடியாது.
நாடாளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதிகள் பலர் உள்ளனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தென்னாபிரிக்க விசேட தூதர் சிறில் ரமபோசா எதிர்வரும் 6ம் திகதி இலங்கைக்கு செல்லவுள்ள நிலையிலேயே இந்த கருத்துக்கள் இன்று கூறப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக