வெள்ளி, 4 ஜூலை, 2014

இந்தியாவில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் புலிகளின் நிதித்துறையில் செயற்பட்டார்....!!!

தமிழகத்தின் தனுஷ்கோடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கை தமிழர்களில் ஒருவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் நிதி சம்பந்தமாக செயற்பட்டவர் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
 சட்டவிரோதமாக கடல் வழியாக சென்ற இவர்கள் நால்வரையும் தமிழக பொலிஸார் கைது செய்தனர்.

38 வயதான சாந்தி, 55 வயதான மில்லர், 38 வயதான ரவி என்ற ரவிந்திரன், 39 வயதான எஸ். சதீஷ் ஆகிய 4 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இவர்களில் சதீஷ் என்பவர் விடுதலைப் புலிகளின் நிதி சம்பந்தமாக செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

செவ்வாய் கிழமை இரவு 7.30 அளவில் மன்னாரில் இருந்து புறப்பட்ட இவர்கள் நேற்று அதிகாலை 1.30 அளவில் தனுஷ்கோடியை கரையை அடைந்தனர்.


இவர்களை அழைத்துச் சென்ற இருவர் மீண்டும் படகில் இலங்கை திரும்பியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக