புதன், 23 ஜூலை, 2014

“மறு பிறவி இருந்தால் மீண்டும் வருகிறேன்…” யாழ்.பல்கலைக்கழகத்தின் மற்றொரு மாணவன் தற்கொலை!!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருட மாணவன் ஒருவர் விடிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்படுகின்றது. நெல்லியடிப் பகுதியில் வசிக்கும் நாகராசா சுதாகரன் (வயது 21) என்ற மாணவனே இவ்வாறு தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.

விடிகாலை 4 மணியளவில் தனது முகப்புத்தகத்தில் “மறு பிறவி இருந்தால் மீண்டும் வருகிறேன் உன் மடியில்
சாய்ந்து உயிர் பிரியும் என்றால்” என்று அவர் பதிவிட்டுள்ளாராம். விசாரணைகளை நெல்லியடிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த மாதம் வவுனியாவைச் சேர்ந்த மாணவன் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடையே போருக்கு பின்னர் கூடுதலாக ஏற்பட்டுவரும் தற்கொலை மனோபாவத்திலிருந்து விடுதலை செய்வதற்கு பல்கலைக்கழக சமூகம் எந்தவித ஆக்க ரீதியான முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக