புதன், 23 ஜூலை, 2014

இராணுவத்தினரின் நடவடிக்கைகளினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்: செல்வம் அடைக்கலநாதன்!!

இராணுவத்தினரின் நடவடிக்கைகளினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
கிருமிநாசினிகள் பயன்பாடு தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்கள் கிருமிநாசினிகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்தவர்கள் அல்லது. தற்போது கிருமிநாசினிகள் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் இயற்கை வளம்
அழிவடைகின்றது.

கிருமிநாசினி பயன்பாட்டினால் புற்று நோய் போன்ற ஆபத்தான நோய்களும் ஏற்படுகின்றன. கிருமிநாசினி பயன்பாட்டை நிறுத்த வேண்டும்.

நல்ல பழங்கள் என நம்பி வீட்டுக்கு வாங்கிச் செல்கின்றோம். அதனை உட்கொள்ளும் சிறுவர் சிறுமியர் நோய் வாய்ப்படுகின்றனர்.

எமது விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர்.  எனினும் எமது விவசாய நிலங்களை கைப்பற்றி,  அதில் இராணுவத்தினர் விவசாயம் செய்கின்றனர்.

இராணுவத்தினர் குறைந்த விலைக்கு தமது விளைச்சலை விற்பனை செய்கின்றனர்.

இராணுவத்தினரின் விவசாய உற்பத்திகளுக்கும் எமது விவசாயிகளின் உற்பத்திகளுக்கும் இடையில் விலை வித்தியாசம் உண்டு.

இராணுவத்தினர் விவசாயத்தில் ஈடுபடுவதனால் வடக்கு விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் ஜீவனோபாய வழிகள் பாதிக்கப்படுகின்றன.

இது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக